வவுனியாவில் சற்றுமுன் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது இன்று வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த 40 வயதான 3 பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் மீது மோதியதிலேயே இவ் விபத்து சம்பவித்துள்ளது.