பதுளை பிரதேசத்தில் விலையுயர்ந்த வலம்புரி சங்கை 3 கோடி ரூபாவுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யவிருந்த நபரொருவர் நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் பதுளை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய நபராவார்.
நுவரெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் கொள்வனவு செய்பவர்களாக வேடம் பூண்டு வந்த அதிகாரிகள் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.