தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் இன்று (5) முதல் மாற்றம் ஏற்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் எனவும் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் எனவும் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.
வட மாகாணம் மற்றும் அநுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யும் அதே வேளையில் சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று பேச்சாளர் கூறினார். மாலை அல்லது இரவில். .