பீகார் மாநிலம் கல்மோர் மாவட்டத்தில் உள்ள ஹதர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி சுந்தரி குமாரி. இவர் பக்கத்து கிராமமான நந்தனா என்ற இடத்திற்கு சென்றார். அங்கு ஒரு வயலில் பருப்பு பயிரின் செடியில் இருந்த இலைகளை பறித்துள்ளார்.
இதை பார்த்த அந்த வயலின் உரிமையாளர் ரமாத்கர் யாதவ் அவரது மகன் கவுரவ் மற்றும் பேர் சுந்தரிகுமாரியை பிடித்து இழுத்து வந்தனர். பின்னர் அவரை மூங்கில் தடியால் அடித்து உதைத்தனர். சிறிது நேரத்தில் வீட்டிற்கு வந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் ரமாத்கா யாதவ், கவுரவ் உள்பட 2 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.