செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கைவத்தளையில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய மூவர் கைது!

வத்தளையில் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கிய மூவர் கைது!

Published on

spot_img
spot_img

வத்தளை பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த மூவரை பொலிஸார் நேற்று (டிச.25) இரவு கைது செய்துள்ளனர்.

வத்தளை, ஹெந்தல சந்தியில் முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தேகநபர்கள் மூவரும், எலகந்த வீதியில் இருந்து கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் பிரவேசித்த போது, முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருந்த போது, கூச்சலிட்டு ஒழுங்கீனமாக நடந்துகொண்ட சந்தேகநபர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்களால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

சோதனையின் போது மூன்று நபர்களும் மதுபோதையில் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, மதுபோதையில் வாகனம் செலுத்திய முச்சக்கரவண்டியின் சாரதியை கைதுசெய்ய அதிகாரிகள் முயற்சித்துள்ளனர்.

எவ்வாறாயினும், அந்த சந்தர்ப்பத்தில், குறித்த நபர்கள் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களைத் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர், சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வத்தளை பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் குழுவொன்று அனுப்பி வைக்கப்பட்டு, சந்தேகநபர்கள் மூவரையும் வத்தளையில் வைத்து முச்சக்கர வண்டியுடன் கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 29 மற்றும் 30 வயதுடைய மாபோல மற்றும் வத்தளை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் காயமடைந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் இன்று (டிசம்பர் 26) வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest articles

சுவிட்சர்லாந்து விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்…..

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக...

இன்றும் நாட்டில் அதிக வெப்பநிலை ….

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என...

கிளிநொச்சி – பளை இயக்கச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் காடழித்து காணிகளை கைவசப்படுத்த முயற்சி….

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

More like this