வட கொரிய உணவு நிலைமை மோசமடைந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் அவசர ஆய்வுக்கூட்டத்தை நடத்தியுள்ளார்.
நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் விவசாயத்தின் வளர்ச்சிக்கான சரியான பாதையை நிறுவுவது மிக முக்கியமான மற்றும் அவசரமான பணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவை கண்காணிக்கும் அமெரிக்க அமைப்பொன்று 1990 களின் பஞ்சத்திற்குப் பின் மிக மோசமான உணவுப் பஞ்சம் வட கொரியாவில் ஏற்பட்டுள்ளதாகவும், மனிதனுக்கு உணவு கிடைப்பது மிகவும் குறைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.
வடகொரிய மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டுவருகிறார்கள் என்கிறது ஐ.நா சபையின் புள்ளிவிவரம்.
வடகொரியா சூழல் இப்படி இருக்க, 2025ஆம் ஆண்டு வரை குறைவாக உணவு சாப்பிடுங்கள் என அதிபர் கிம் ஜோங் உன் அண்மையில் கூறியிருக்கிறார்.
பசி, பட்டினியால் மக்கள் வாடினாலும், ஏவுகணை சோதனைகளை கைவிடாமல் அவ்வப்போது வடகொரியா மேற்கொள்வது உலகநாடுகளை அதிருப்தி அடைய வைக்கிறது.
மக்களை வதைக்கும் இந்த உணவுப் பஞ்சத்தை வடகொரியா எப்படி சமாளிக்கப்போகிறது என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.இந்த நிலையில், ஒவ்வொருவரும் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று ஒரு நாட்டின் ஆட்சியாளர் சொல்வது மிக மிகத் தவறு.
உணவுக் கட்டுப்பாடு விதித்திருப்பது ஆட்சியாளர்களின் தோல்வியையே காட்டுகிறது” என்று அந்நாட்டில் கண்டனங்கள் வலுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.