இத்தாலி நாட்டில் வடக்கு பகுதியில் உள்ள எமிக்லியா, ரோமங்னா மாகாணம் வெள்ளத்தில் சிக்கியதால் மக்கள் தத்தளித்து வருகின்றனர். இத்தாலி நாட்டில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால் எமிக்லியா, ரோமங்னா மாகாணம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
எமிக்லியா, ரோமங்னா மாகாணத்தின் தலைநகர் போலோக்னா நகரில் எங்கு பார்த்தாலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. கார் உட்பட ஏராளமான வாகனங்கள் மூழ்கி கிடக்கின்றன. குடியிருப்புகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குடியிருப்புகளை சுற்றி வெள்ளம் இருப்பதால் மக்கள் அவதிக்குளாகியுள்ளனர்.