பிரான்சில் லொறியின் பின்புறத்தில் இருந்து ஆறு பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு வியட்நாமியர்களும் இரண்டு ஈராக்கியர்களும், புலம்பெயர்ந்தவர்கள் என்று கருதப்பட்டு, உள்ளே சிக்கி, பீதியடைந்து மூச்சுவிட சிரமப்பட்டனர். அவர்களில் ஒருவர் லொறியிக்குள் இருந்து போலீசாரிடம் பேசியுள்ளார்.
பின்னர் லொறியை தடுத்து நிறுத்தி லொறி டிரைவரை பிரான்ஸ் போலீசார் கைது செய்துள்ளனர்.சந்தேகத்திற்கிடமான மனித கடத்தல் நடவடிக்கை குறித்தும் அவர்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.