லியோவை பார்க்க ஆவல் – ஷாருக்கான் டுவீட்
இப்படத்தில் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கவுதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் அனுராக் காஷ்யப் சிறப்பு வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் அக்டோபர் 19 -ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், லியோ மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் தளபதியின் லியோ படத்தை பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன், ஐ லவ் யூ விஜய் சார் என பாலிவுட் நடிகர் ஷாருக்கான் எக்ஸ்- தளத்தில் பதிவிட்டுள்ளார்.