ராமர் பாலம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உள்ளதா என்று கூறுவது கடினம் என இந்திய இராஜாங்க அமைச்சர் ஜினேந்திர சிங் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ராமசேது அல்லது ஆதாம் பாலம் என்று அழைக்கப்படும் இந்தப் பாலம் குறித்து இந்திய அரசு இப்படி ஒரு அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல் முறை. செயற்கைக்கோள் படங்கள் தளத்தில் சுண்ணாம்பு கல் இருப்பதைக் காட்டியது. ஆனால் பாலமா என்று சொல்ல முடியாது. இந்த இடம் 18000 ஆண்டுகள் பழமையானது” என்று ஜினேந்திர சிங் மேலும் கூறினார்.
சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகேபா சர்மா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இந்திய இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.