ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டம், விகாஸ் சங்வான் பகுதியில் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இரவில் இந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர்கள், துணிகர கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். ஏ.டி.எம். எந்திரத்தை உடைக்க முடியாததால், அவர்கள் ஒரு வாகனத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை கட்டி இழுத்து, அப்படியே பெயர்த்து எடுத்து சென்றுள்ளனர். அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் ரூ.30 லட்சத்திற்கும் அதிகமான பணம் இருந்ததாக வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சி.சி.டி.வி. கேமரா பதிவுகளின் உதவியுடன் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.