செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇந்தியாராஜஸ்தானில் கடித்துக் குதறி உரிமையாளரை கொன்ற ஒட்டகம்.. ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த உறவினர்கள்.

ராஜஸ்தானில் கடித்துக் குதறி உரிமையாளரை கொன்ற ஒட்டகம்.. ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த உறவினர்கள்.

Published on

spot_img
spot_img

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தன் உரிமையாளரை கடித்து கொன்ற ஒட்டகத்தை, அந்த கிராமவாசிகள் அடித்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டகத்திற்கு கோபம் வந்துவிட்டால் தன்னை வளர்த்தவர் என்று கூட பார்க்காது, யாராக இருந்தாலும் தாக்கிவிடும் என்று ஒட்டகம் வளர்ப்பவர்கள் கூறுகிறார்கள். அப்படித்தான் ஒட்டகம், அதன் உரிமையாளரை கடுமையாக தாக்கி கொன்றுள்ளதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே பஞ்சு ஊரில் ஒருவர் தனது ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்திருக்கிறார். அப்போது ஒரு ஒட்டகம் அவரின் தலையை கடித்து இழுத்து தூக்கி போட்டிருக்கிறது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். உரிமையாளரைக் கொன்ற ஒட்டகம் தொடர்பான தகவல் அந்தப் பகுதியில் தீயாய் பரவியது.

சம்பவ இடத்துக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் வந்துள்ளனர். ஓனரை கடித்த ஒட்டகத்தை மட்டும் தனியே ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். அதேநேரம் உடனடியாக ஒட்டகத்திடம் கடிபட்ட ஓனரை சிகிச்சைகாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்திருக்கிறார்கள் உறவினர்கள். ஆனால் அவர் ஏற்கெனவே இறந்து விட்டது தெரியவந்தது. இதனால் உறவினர்களுக்கு ஆத்திரம் தாங்கவில்லை என்று கூறப்படுகிறது.
ஒட்டகத்தால் கொல்லப்பட்டவரின் உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் அந்த ஒட்டகத்தை கட்டையால் அடித்து அதன் தலையை சிதைத்து கொன்றுள்ளார்கள், இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. இது தொடர்பாக பன்சு காவல் நிலைய மனோஜ் யாதவ் கூறும் போது, “ஒட்டகத்தை கிராமத்தில் சிலர் மேய்த்து கொண்டிருந்தனர். ஒரு ஒட்டகம் கயிறை அறுத்துக்கொண்டு தறிகெட்டு ஓடியிருக்கிறது. சோகன்ராம் நாயக் என்பவரது ஒட்டம் என்பது தெரியவந்திருக்கிறது.

சோகன்ராம் ஒட்டகத்தை கட்டுப்படுத்த முயன்றிருக்கிறார். அப்போது ஆத்திரம் அடைந்த ஒட்டகம் அவரை கடித்துக்குதறி தூக்கி எறிந்துள்ளது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அவரது உறவினர்கள் விரைந்து வந்து சோகன்ராமை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இந்த ஆத்திரத்தில் ஒட்டகத்தை கட்டிவைத்து அடித்து கொன்றுள்ளார்கள்” என்றார்.

ஒட்டகத்தை கொன்றது தொடர்பாக கிராம வாசிகளிடம் கேட்கப்பட்டபோது,” ஒட்டகத்துக்கு மன நலம் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் தான் யார் என்றே தெரியாமல் அது தாக்கத் தொடங்கும். அதன் காரணமாகதான் அதன் உரிமையாளரைக் கொன்றது. அதை அப்படியே விட்டால் மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்பதால் அதைக் கொன்றோம்” என்றிருக்கிறார். இதனிடையே ராஜஸ்தானின் மாநில விலங்கான ஒட்டகம் கொல்லப்பட்டது குறித்து காவல்நிலையத்திற்கு எந்த புகாரும் வரவில்லை என்று கூறப்படுகிறது. எனினும் போலீசார் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். உயிரிழந்தவரின் உடல் உடற் கூறு ஆய்விற்கு பின் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Latest articles

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...

யாழில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர் உயிரிழப்பு…..

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதியொருவர், இன்று திங்கட்கிழமை (20) உயிரிழந்துள்ளார். புத்தூர் வாதரவத்தையைச் சேர்ந்த 23 வயதுடைய சுதாகரன்...

More like this

அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 23,731 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.தேசிய டெங்கு நோய் கட்டுப்பாட்டுப்பிரிவின் புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

வாகன சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை…..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் சாரதிகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை விசேட அறிவித்தல்...

லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய நடவடிக்கை….

அடுத்த வருடம் முதல் லஞ்ச் சீட்டை முற்றாகத் தடை செய்ய மத்திய சுற்றாடல் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி...