தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகப்பிரிவு தலைவர் ஆ. கோபண்ணாவின் புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “இந்தி பேசாத மக்களிடம் இந்தி திணிக்கப்படாது என்று வாக்குறுதி அளித்தார் நேரு. தற்போது குறுக்கு வழிகளில் இந்தி நுழைகிறது,” என்று கூறினார்.
“இந்தியா முழுமைக்குமான பிரதமராக இருந்தவர் நேரு.ஒற்றை மொழி, ஒரே கலாசாரத்துக்கு எதிராக இருந்தவர். வகுப்புவாதம், தேசியவாதம் சேர்ந்திருக்க முடியாது என சொன்னவர் ராகுல் காந்தியின் பேச்சு ஜவாஹர் லால் நேரு பேசுவது போலவே உள்ளது.
நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை,” என்று கூறினார்.