யுக்ரைன் படையெடுப்பில் படுகாயமடைந்த டசின் கணக்கான ரஷ்ய வீரர்கள் கவனிக்கப்படாமல் மரணத்திற்கு தள்ளப்படும் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
யுக்ரைன் நாட்டவரான சமூக ஊடக செயற்பாட்டாளர் ஒருவர் குறித்த தகவலுக்கு அடிப்படையான காணொளிகளை வெளியிட்டுள்ளார். யுக்ரைனில் ரஷ்ய வீரர்கள் படும் அவஸ்தைகளை அவர்களது உற்றார் உறவினர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என தாம் வெளியிடுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ரஷ்ய ஊடகங்கள் உண்மை நிலையை வெளிப்படுத்துவதில்லை எனவும், விளாடிமிர் புடினுக்கு அவர்கள் அச்சப்பட்டு உண்மையை மறைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.