ரஷ்யாவின் பாதுகாப்பு சேவையான FSB, அரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களை குறிவைத்து சைபர் ஹேக்கிங் செய்வதாக பிரிட்டன் குற்றம் சாட்டியுள்ளது, 2019 தேர்தல் காலத்தில் ஒரு குழுவினர் தரவுகளை திருடி பொதுவெளியில் வெளியிட்டதாகவும் பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்தது.
அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், கல்விமான்கள் என நூற்றுக்கணக்கான உயர் அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் தனது மின்னஞ்சல் திருடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியிருந்தார்.