2022 ஆம் ஆண்டில் திட்டமிடப்பட்ட ரயில் சேவைகளில் 27 வீதமானவை மாத்திரமே உரிய நேரத்தில் பயணித்ததாக கணக்காய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.
அத்துடன், 2022 ஆம் ஆண்டில் இரத்து செய்யப்பட்ட மற்றும் தாமதமாக பயண நடவடிக்கையினை முன்னெடுத்த ரயில் சேவைகளின் எண்ணிக்கை 88,149 என கணிப்பிடப்பட்டுள்ளது.இதன்படி, 72 வீதமான ரயில் சேவைகள் தாமதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டு இந்தியாவிடம் இருந்து 10 இன்ஜின்கள் மற்றும் 6 பவர் செட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.இருப்பினும், 2022 ஆம் ஆண்டில் 23 இன்ஜின்கள் மற்றும் 36 பவர் செட்கள் உரிய முறையில் பயன்படுத்தப்படவில்லை என கணக்காய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.