கொழும்பு பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பம்பலப்பிட்டி புகையிரத நிலையத்திற்கு அருகில் மொரட்டுவை நோக்கி சென்ற ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (ஏப்ரல் 17) காலை புகையிரத தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
24 வயதான இவர் களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகிறது.
மற்றுமொரு நிகழ்வில் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் 80 வயது முதியவர் ஒருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்.
புகையிரத நிலையத்தில் புகையிரதத்தை நிறுத்துவதற்கு முன்னர், புகையிரதத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட போது குறித்த முதியவர் தடுமாறி ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.