பேரீச்சம்பழ இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரியை கிலோகிராம் ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து 1 ரூபாவாக குறைத்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முஸ்லிம்களின் நோன்பு காலத்தை முன்னிட்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் , நலன் விரும்பிகள் ஆகியோரிடம் இருந்து அன்பளிப்பாகவோ நன்கொடையாகவோ பெறுவதற்கு வசதியாகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த காலப் பகுதிக்கே இந்த வரி விலக்கு பொருந்தும் எனவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.