இசைப்பயணத்தில் 25வது ஆண்டை நிறைவு செய்துள்ள யுவன் சங்கர் ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது இசைவாழ்க்கையில் 25வது ஆண்டை நிறைவு செய்துள்ள இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுக்கு பிரபலங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சீமான் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், புகழொளி மிளிரும் இசைப்பயணத்தில் 25வது ஆண்டினை நிறைவு செய்துள்ள இன்னிசை இளவரசன் என் அன்புத்தம்பி யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு பெருமித வாழ்த்துகள்.
தன் தீந்தமிழ் பாடல்களால் திசையெங்கும் வீசுகிற காற்றை இனிக்க வைத்து, கேட்போர் மனங்களில் வற்றாத அருவியாய் கொட்டி தீர்க்கிற தம்பி யுவனின் இசை இன்னும் பல ஆண்டுகள் தமிழர் இதயங்களை நிரப்பி, புகழின் உச்சம் தொட வேண்டும் என்று எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
காலங்களை வென்று நிற்கும் இசைப்படைப்புகளால் சாதனைப் பக்கங்களில் நிறைந்து ஒளிரும் இன்னிசை இளவரசன் யுவன் சங்கர் ராஜா அவர்களுக்கு எனது மனம் நெகிழ்ந்த அன்பினையும், பூரிப்பு வாழ்த்துக்களையும் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன் என சீமான் தெரிவித்துள்ளார்.