இரண்டு யுக்ரேனிய Su-24m குண்டுவீச்சு விமானங்களை ஒரே இரவில் கார்கிவ் பகுதியில் சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளால் யுக்ரைனுக்கு வழங்கப்பட்ட ஆயுதங்களையும் ஒடேசாவிற்கு அருகிலுள்ள இராணுவ விமானநிலையத்தில் ஓடுபாதையை அழித்ததாகவும் கூறியுள்ளது.
ஒடேசாவின் பிரதான விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட ஓடுபாதையை ரஷ்யா அழித்ததாக யுக்ரைன் குற்றம் சாட்டியது
இந்நிலையில் உயர் துல்லியமான ஓனிக்ஸ் ஏவுகணைகளைப் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியதாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.