யாழ்.மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகளின் நிலவும் பிரச்சனைகள் தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி யாழ். மாவட்ட வைத்தியசாலைகளில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதனை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் வி. தர்சன் தெரிவித்தார்.
குறித்த போராட்டமானது, யாழ்.மாவட்ட வைத்தியசாலைகளில் நாளை (20.09.2023) மற்றும் நாளை மறுதினம் (21.09.2023) ஆகிய இரு தினங்களும் நடைபெறவுள்ளது.
வைத்தியசாலைகளில் நிலவும் மருந்துத் தட்டுப்பாடு மற்றும் வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவது சுகாதார கட்டமைப்பை பாதிக்கும்.எனவே அதனை தடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த போராட்டத்தை முன்னெடுக்கப்படவுள்ளதாக வி. தர்சன் தெரிவித்தார்.