Homeஇலங்கையாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு

யாழ். போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் குருதிக்குத் தட்டுப்பாடு

Published on

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் அனைத்து வகையான குருதிக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென இரத்த வங்கி அறிவித்துள்ளது.நாளுக்கு நாள் குருதி விநியோகம் அதிகரித்துச் செல்வதினால் இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்க முடியாதுள்ளது.

ஆகவே 18 – 55 வயதிற்கு இடைப்பட்ட, 50 Kg ம்  அதற்கு மேற்பட்ட நிறையும் கொண்ட ஆண் பெண் இருபாலாரும் எவ்வித பிரச்சனையுமின்றி இரத்ததானம் செய்யலாம்.ஏற்கனவே இரத்ததானம் செய்தவர்கள் எவ்வித நோய்களுமின்றி இருந்தால் 60 வயது வரை இரத்ததானம் செய்யலாம்.

எனவே தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு ஏற்கனவே இரத்ததானம் செய்து நான்கு மாதங்கள் நிறைவடைந்தவர்களும் புதிதாக இரத்ததானம் செய்ய விரும்புவர்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு வருகை தந்து இரத்ததானம் செய்து உயிர்காக்கும் உன்னத பணிக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் உங்கள் ஊர்களிலும்  இரத்ததான முகாம்களை ஏற்பாடு செய்து எமக்கு அறிவித்தால் நாம் வருகை தந்து குருதியை சேகரிக்கும் பணிகளை முன்னெடுப்போம்.

எம்முடன், 0772105375 அல்லது  0212223063 எனும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொள்ள முடியும் என அறிவித்துள்ளனர்.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this