test
செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கையாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை விட்டு சென்ற மாணவி மீட்பு....

யாழ் போதனா வைத்தியசாலையில் குழந்தையை விட்டு சென்ற மாணவி மீட்பு….

Published on

spot_img
spot_img

யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன் , மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

யாழ்.போதனா வைத்தியசாலையில் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயாரும் மாணவிக்கு உதவியாக நின்றுள்ளார். மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள், தாயும் மாணவியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து , அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குழந்தையை பிரசவித்த மாணவியையும் , அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.

விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய மல்லாவி பகுதியை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Latest articles

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் உயிரிழப்பு…..

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய பிரதேசத்தில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தூதுவரான Jean...

பிரபல இசையமைப்பாளர் காலமானார்….

இலங்கையின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 67...

இன்றைய நாள் ராசி பலன்கள்

குரோதி வருடம் வைகாசி மாதம் 14 ஆம் தேதி திங்கட்கிழமை 27.05.2024 இன்று மாலை 05.08 வரை சதுர்த்தி. பின்னர்...

அஸ்வசும கொடுப்பனவை வடக்கில் ஆரம்பிக்க அரசாங்கம் நடவடிக்கை

அஸ்வசும இரண்டாம் கட்ட  கொடுப்பனவு திட்டத்தை வடமாகாணத்தில் ஆரம்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. வடமாகாண கிராம உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தின் நலன்புரி வேலைத்திட்டங்களை...

More like this