யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று பௌர்ணமி தினத்தை ஒட்டி புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.
பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.
இதற்காக பல்கலைக்கழகம் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நாக விகாரையில் இருந்து புத்தரின் சிலை எடுத்துச் செல்லப்பட்டு பல்கலைக்கழகத்தில் பூசை வழிபாடு இடம்பெற்றன.
யாழ். நாக விகாரையின் விகாராதிபதியும் புத்தர் சிலையுடன் அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்.
பூசை வழிபாடுகளின் நிறைவில் புத்தர் சிலை மீண்டும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.