யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் தற்காலிக உதவி விரிவுரையாளர் பதவிகளுக்கு பொருத்தமானவர்களிடம் இருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பத்தை அனுப்பி வைக்குமாறு பல்கலைக்கழக பதிவாளர் கோரியுள்ளார்.
தொல்லியல், கிறிஸ்தவ நாகரிகம், கலாச்சார சுற்றுலா,பொருளியல், ஆங்கில இலக்கியம்,நுண்கலை, மொழியியல், புவியியல், வரலாறு, மனைப் பொருளியல், தகவல் தொழில்நுட்பம், மெய்யியல், உளவியல், திட்டமிடல், தகவல் தொழில்நுட்பம், ஊடக கற்கைகள் ஆகிய துறைகளுக்கே விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான முழுமையான விபரங்களை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உத்தியோகபூர்வ இணையத்தளம் ஊடாக அறிந்துகொள்ள முடியும்.