யாழில் கடற்றொழிலுக்கு சென்ற கடற்றொழிலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குறித்த சடலம் யாழ்ப்பாணம் – பருத்தித்துறை துறைமுகத்திற்கு இன்று(17.09.2023) அதிகாலை 1.30 மணியளவில் கொண்டுவரப்பட்டுள்ளது.
பருத்தித்துறை பகுதியில் இருந்து நேற்று (16.09.2023) சனிக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கடற்றொழிலுக்கு சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 44 வயதுடைய ஆர்.பி.நிமல் கருணாரத்ன என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.