யாழ். தீவக பாடசாலை ஒன்றில் மூர்க்கத்தனமாக மாணவியை தாக்கிய அதிபரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த அதிபரினால் மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட மாணவி, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று வீடு திரும்பியுள்ளார்.
இந்நிலையில் பாடசாலை மாணவி தாக்கப்பட்ட விடயம் தொடர்பில் நேற்றைய தினமே பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்ததாகவும் குறித்த அதிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துவர போலீஸ் குழு ஒன்று யாழ்ப்பாணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவரை கைதுசெய்ய உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஊர்காவற்றுறை பொலிஸாரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினாலும் விசாரணைகள் நாளைய தினம் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.