Homeஇலங்கையாழ் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் வழங்கிய வாக்குமூலம்

யாழ் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் வழங்கிய வாக்குமூலம்

Published on

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்குப் பகுதியில் கடந்த சனிக்கிழமை அடிகாயங்களுடன், நிர்வாண நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் ஒரு வார காலமாக விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறான நிலையில், எனது மகளுக்கு பாலியல் தொல்லை செய்ததால் முச்சக்கரவண்டி சாரதியை அடித்தேன் எனவும் கொலை செய்யவில்லை என பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் பொலிஸில் வாக்கு மூலம் வழங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ். கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டு அரங்கு பகுதியில் நிர்வாண நிலையில் ஆண்ணொருவரின் சடலம் கடந்த சனிக்கிழமை அன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் செய்யப்பட்டவர்களில் ஒருவரான பெண் ஒருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

குறித்த சம்பவத்தில் சடலமாக மீட்கப்பட்ட நபர் கோப்பாய் பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதான சிறுமி ஒருவரை வழமையாக முச்சக்கரவண்டியில் பாடசாலைக்கு ஏற்றி இறக்கி வந்துள்ளார்.

இதனைப் பயன்படுத்தி குறித்த நபர் சிறுமியுடன் தவறாக நடந்ததாக சிறுமி, தனது தாயாருக்கு தெரிவித்த நிலையில் தாயாரே கொலை செய்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்தது.

இந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், சம்பவம் இடம்பெற்ற அன்று சிறுமியின் தாய் உட்பட 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.மறுநாள் ஞாயிற்றுக்கிழமை மேலும் 4 ஆண்களும் கைது செய்யப்பட்டனர்.

இவ்வாறான நிலையில், சிறுமியின் தாயிடம் இடம்பெற்ற விசாரணையில் தான் குறித்த நபரைக் கொலை செய்யவில்லை, அடித்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

நேற்றைய தினம் திங்கட்கிழமை சந்தேக நபர்கள் ஆறு பேரும், யாழ்.நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Latest articles

பேருவளையில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் காயம்

பேருவளை மாகல்கந்த பகுதியில் நேற்று (03) இரவு கதிர்காமத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு...

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

அனைத்து அரச ஊழியர்களின் சம்பளத்தையும் 20,000 ரூபாவால் அதிகரிக்குமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்ததாக அரச சேவை தொழிற்சங்கங்களின்...

சென்னை விமான நிலையத்தில் இணையதள சேவை பாதிப்பு:விமானங்கள் புறப்படுவதில் தாமதம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றனர். சென்னை மீனம்பாக்கம் விமான...

19 அடி உயர அம்பேத்கர் சிலை:அமெரிக்காவில் அக்டோபர் 14ம் திகதி திறப்பு

அம்பேத்கரின் 19 அடி உயர சிலை அமெரிக்காவிலுள்ள மேரிலாண்டில் அக்டோபர் 14ம் திகதி திறக்கப்பட உள்ளது. இந்திய அரசியலமைப்பு...

More like this