யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த மாணவி கிளிநொச்சி – கோணாவில் கிராமத்தில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.இவர் கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் வீட்டில் தூக்கிட்டிருந்த நிலையில் சகோதரனால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளாக கூறப்படுகிறது.இந்நிலையில், குறித்த சடலம் மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.