யாழ்ப்பாணம் – தென்மராட்சி எழுதுமட்டுவாழ் பகுதியில் இருந்து 16 கிலோ கஞ்சா மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று பிற்பகல் (09-03-2023) 4.30 மணியளவில் குறித்த கஞ்சா மீட்டுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொலிஸாருக்குக் கிடைத்த விசேட தகவலையடுத்து மோட்டார் சைக்கிள் ஒன்றை சோதனையிட்ட போது குறித்த கஞ்சா மீட்க்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேக நபர் தப்பியோடிய நிலையில், அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.