நேற்று மாலை சங்குப்பிட்டி வீதித்தடையில் கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட தேடுதலின் போது பஸ்ஸில் 4 கிலோகிராம் கஞ்சாவை ஏற்றிச் சென்ற நபர் ஒருவரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.
வடக்கு கடற்படை கட்டளையில் உள்ள SLNS வெலுசுமண மூலம் புனகரி பொலிஸாரின் ஒருங்கிணைப்புடன் சங்குப்பிட்டி வீதித் தடுப்பில் கடந்த மார்ச் 01 ஆம் திகதி தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிச் சென்ற பேருந்தில் சந்தேகநபர் 04 கிலோகிராம் எடையுள்ள 02 கஞ்சா பொதிகளை எடுத்துச் சென்ற வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 மில்லியன்.
இந்தச் சோதனையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாழ்ப்பாணம் அனலத்தீவு தீவில் வசிக்கும் 26 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சந்தேகநபர், கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புநகரி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.