யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளி பகுதியில் ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி சந்தேகநபரிடம் இருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம், பூப்பாமிவெளி 5ஆம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், கொடிய போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக நீண்டகாலமாக தேடப்பட்டு வந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.