யாழ்.மாவட்டத்தில் பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 04 பேரை யாழ்.பொலிஸாரின் விசேட பொலிஸ் குழுவினர் கைது செய்துள்ளனர்.
இதன்படி, யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றில் கடந்த 3ஆம் திகதி அதிகாலை பிரவேசித்த சந்தேகநபர்கள் அங்கிருந்தவர்களை பயமுறுத்தி வீட்டில் இருந்த சுமார் 12 பவுண் நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக கோப்பாய் பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை ஆரம்பித்த பொலிசார் சந்தேக நபர்களையும், நிறைய நகைகள் மற்றும் பல வாள்களையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25 மற்றும் 26 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், யாழ்ப்பாணம் சுன்னாகம் மற்றும் இணுவில் பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.