யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த இளம் தம்பதியினரை ஜன்னல் வழியாக வீடியோ பதிவு செய்த விடுதி ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி விடுதியில் உள்ள அனைத்து அறைகளின் சுவர்களிலும் இரகசியமாக கமெராக்கள் பொருத்தப்பட்டு, அதன் ஊடாக தொடர்ச்சியாக காணொளிப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் சென்ற தென்னிலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதிகள் குறித்த விடுதியில் தங்கியுள்ளனர்.
ஜன்னல் வழியாக அவர்கள் தூங்குவதை யாரோ படம் பிடித்ததை அவதானித்தவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
அவர்கள் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட போது விடுதியின் அனைத்து அறைகளிலும் இரகசியமாக கமெராக்கள் பொருத்தப்பட்டு அதன் மூலம் காணொளிகள் பதிவாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் பின்னர், இளம் ஜோடியை படம் பிடித்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், விடுதியில் கடமையாற்றிய ஊழியர்கள் சிலர் தலைமறைவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.