யாழ் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட 15 பிரதேச செயலக பிரிவுகளில் போதிய உணவு இல்லாமல் 13 ஆயிரத்து 888 பேர் இருப்பதாக யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் யாழ் மாவட்டத்தில் போதிய உணவில்லாமல் இருப்போர் பட்டியலில் ஊர்காவல்துறை பிரதேச செயலகம் 2, 966 பேருடன் முதலிடத்தையும் இரண்டாவது இடத்தை 2,618 பேருடன் பருத்தித்துறை பிரதேச செயலகமும் பெற்றுள்ளதுடன், மூன்றாவது இடத்தில் 2,245 சங்கானை பிரதேச செயலகம் உள்ளது.
யாழ். மாவட்ட செயலகப் புள்ளி விபரங்களின் படி,உடுவில் பிரதேச செயலகம் – 1800 பேர் ,நெடுந்தேவு பிரதேச செயலகம் – 932 பேர்,மருதங்கேணி பிரதேச செயலகம் – 750 பேர்,வேலனைப் பிரதேச செயலகம் – 682 பேர்,கோப்பாய் பிரதேச செயலகம் – 564 பேர்,கரவெட்டி பிரதேச செயலகம் – 377 பேர்,யாழ். பிரதேச செயலகம் – 124 பேர்,சாவகச்சேரி பிரதேச செயலகம் – 120 பேர்,சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் – 108 பேர்,காரைநகர் பிரதேச செயலகம் – 38 பேர் என காணப்படுகின்றனர்.
யாழ் மாவட்டத்தில் மந்தப் போசாக்கு உள்ளவர்களாக 8112 பேர் காணப்படுவதுடன் அவர்களில் ஐந்து வயதுக்கு உட்பட்டு 3796 பேரும், ஐந்து வயது தொடக்கம் 9 வயதிற்குட்பட்டு 2969 பேரும் 10 வயது தொடக்கம் 17 வயதிற்குட்பட்டு 2347 பேரும் உள்ளதாக மாவட்ட செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.