செய்திகள் மற்றும் மரண அறிவித்தல்களை இங்கு பதிவிடலாம். மேலதிக விபரங்களுக்கு 0044-7442681936
Homeஇலங்கையாழில் வைத்தியர்களின் பொறுப்பற்ற செயலால் உயிரிழந்த குழந்தை

யாழில் வைத்தியர்களின் பொறுப்பற்ற செயலால் உயிரிழந்த குழந்தை

Published on

spot_img
spot_img

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிசு ஒன்று உயிரிழந்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடுமாறு, பொலிஸார் ஊடாக நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜாவினால், மேலதிக விசாரணையை மேற்கொள்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புலோலி வடக்கு, கூவில் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் பிரசவத்திற்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.குறித்த பெண்ணுக்கு (11-04-2023) குழந்தை பிறந்த போதிலும் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விடுத்த பணிப்புரைக்கு அமைய, சட்ட வைத்திய அதிகாரி பிரேத பரிசோதனையை முன்னெடுத்துள்ளார்.

பிரசவ ஊசி செலுத்தப்பட்டதன் பின்னர் தாய் உரிய முறையில் கவனிக்கப்படாமையால், கருப்பை வெடித்து, சிசுவிற்கு குருதி கடத்தப்படுவது தடைப்பட்டுள்ளமை பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா தெரிவித்தார்.

இதனடிப்படையில், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கான உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி, பருத்தித்துறை பொலிஸார் ஊடாக நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Latest articles

சுவிட்சர்லாந்து விமானப் பணித்துறையின் தலைமை ஊழியரான ஈழத்தமிழன்…..

சுவிட்சர்லாந்தில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞரொருவர் தான் கற்ற கல்வியை விட்டு விட்டு தன் மனத்திற்குப் பிடித்ததால் விமானப் பணியாளராக...

இன்றும் நாட்டில் அதிக வெப்பநிலை ….

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் மன்னார் மாவட்டத்திலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும் என...

கிளிநொச்சி – பளை இயக்கச்சியில் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் காடழித்து காணிகளை கைவசப்படுத்த முயற்சி….

கிளிநொச்சி பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக தென்னிலங்கையை சேர்ந்த பெரும்பான்மை இனத்தைவர்கள்...

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு…..

முல்லைத்தீவு அளம்பில் பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் எதிர் எதிரே மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் மரணமடைந்துள்ளார். நேற்று (01.03.2024) இரவு...

More like this