யாழில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து ஒன்று தீக்கிரையாகியுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவில் ஆனைக்கோட்டை பகுதியில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இன்று (21) அதிகாலை 3.40 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனைக்கோட்டை, சாவல்கட்டு பகுதியில் உரிமையாளர் வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே பேருந்து தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.