[tds_plans_description year_plan_desc="JTJGeWVhcg==" month_plan_desc="JTJGJTIwbW9udGg=" free_plan_desc="JUUwJUFFJTlBJUUwJUFGJTg2JUUwJUFFJUFGJUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIxJUUwJUFGJThEJUUwJUFFJUIxJUUwJUFGJTgxJUUwJUFFJUFFJUUwJUFGJThEJTIwJUUwJUFFJUFFJUUwJUFFJUIwJUUwJUFFJUEzJTIwJUUwJUFFJTg1JUUwJUFFJUIxJUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJUE0JUUwJUFGJThEJUUwJUFFJUE0JUUwJUFFJUIyJUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFFJUIzJUUwJUFGJTg4JTIwJUUwJUFFJTg3JUUwJUFFJTk5JUUwJUFGJThEJUUwJUFFJTk1JUUwJUFGJTgxJTIwJUUwJUFFJUFBJUUwJUFFJUE0JUUwJUFFJUJGJUUwJUFFJUI1JUUwJUFFJUJGJUUwJUFFJTlGJUUwJUFFJUIyJUUwJUFFJUJFJUUwJUFFJUFFJUUwJUFGJThELiUyMCVFMCVBRSVBRSVFMCVBRiU4NyVFMCVBRSVCMiVFMCVBRSVBNCVFMCVBRSVCRiVFMCVBRSU5NSUyMCVFMCVBRSVCNSVFMCVBRSVCRiVFMCVBRSVBQSVFMCVBRSVCMCVFMCVBRSU5OSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRSVCMyVFMCVBRiU4MSVFMCVBRSU5NSVFMCVBRiU4RCVFMCVBRSU5NSVFMCVBRiU4MSUyMCUyMCUzQ2ElMjBocmVmJTNEJTIydGVsJTNBMDA0NC03NDQyNjgxOTM2JTIyJTNFJTIwMDA0NC03NDQyNjgxOTM2JTNDJTJGYSUzRQ==" vert_align="middle" color="#f9f9f9" horiz_align="content-horiz-center" links_color="#23fcf5" links_color_h="#224af9"]
Homeஇலங்கையாழில் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்த 22 வயதான இளைஞன்!

யாழில் விபரீத முடிவை எடுத்து உயிரிழந்த 22 வயதான இளைஞன்!

Published on

spot_img
spot_img

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காலையடி தெற்கு பண்ணாகம் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர்  தவறான முடிவை எடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் 22 வயதான அருளானந்தம் லக்ஸன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த இளைஞன் வெளிநாடு ஒன்றுக்கு வேலைக்காக சென்றிருந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் வீட்டுக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் அவர் (23-08-2023) வீட்டில் பணம் கேட்டு சண்டையிட்டதுடன், தண்ணீர் இறைக்கும் மோட்டாரை கிணற்றினுள் தூக்கி வீயுள்ளார். மேலும், வீட்டிலிருந்த பொருட்களையும் அடித்து உடைத்துள்ளார்.

இந்நிலையில் அவர் நேற்றையதினம் (24-08-2023) மதியம் வீட்டிற்கு அருகேயுள்ள காணியொன்றில் உள்ள விளாத்தி மரத்தில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.மேலும், அவர் போதைக்கு அடிமையானவர் என அறியமுடிகிறது.

அவரது சடலமானது பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

Latest articles

ஐஸ்போதைப் பொருளுடன் ஐவர் கைது….

ஐஸ்போதைப் பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ்...

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

கம்பஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவையில் பாரிய விபத்து...

கிளிநொச்சியில் புதையல் தேடிய 05 நபர்கள் கைது……

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய...

பிக்கு தாக்கியதில் உயிரிழந்த முதியவர்…..

கிரியுல்ல - கஜுலந்தவத்த மாரவில பிரதேசத்தில் வீடொன்றில் தங்கியிருந்த பிக்கு ஒருவர் தாக்கியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒருவர் காயமடைந்து...

More like this

ஐஸ்போதைப் பொருளுடன் ஐவர் கைது….

ஐஸ்போதைப் பொருளுடன் நால்வரும், போதை மாத்திரைகளுடன் இருவருமாக ஐவரை காத்தான்குடி பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ்...

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி

கம்பஹாவில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். எடேரமுல்ல பிரதேசத்தில் உள்ள தொடருந்து கடவையில் பாரிய விபத்து...

கிளிநொச்சியில் புதையல் தேடிய 05 நபர்கள் கைது……

விடுதலைப்புலிகளின் அன்பு முகாம் இருந்த பகுதியில் புதையல் தேடிய பொலிஸ் அதிகாரி, ஆசிரியர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றைய...