யாழ்ப்பாணம் – கொக்குவில் பொல்பதி வீதியில் உள்ள தனியார் காணியில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த சந்தேகத்திற்குரிய இடத்தை தோண்டுவதற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்துள்ளதுடன், குறித்த பகுதியை தோண்டும் பணி நாளை காலை முன்னெடுக்கப்படவுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கொக்குவில் பொல்பதி வீதியில் விடுதலைப்புலிகள் முகாம் இருந்த பகுதியில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்ற உத்தரவு கிடைத்ததையடுத்து நாளை அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.