யாழ். போதனா வைத்தியசாலையில், மருத்துவத் தவறினால் 8 வயதுச் சிறுமியொருவரின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவம் பெரும் சர்ர்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
யாழ் இந்து ஆரம்ப பாடசாலை மாணவியான வைசாலி எனும் சிறுமியே இந்த துயர சம்பவத்திற்கு முகம் கொடுத்திருந்தார்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது கற்றலைத் தொடர்வதற்காக இன்றைய தினம் பாடசாலைக்கு சமூகமளித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அத்துடன் சிறுமியை வரவேற்றுள்ள பாடசாலை சமூகத்தினர் அவர் கற்றலைத் தொடர்வதற்கு அனைத்துவிதமான உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.இதன்போது சக மாணவர்கள் இன்முகத்துடன் மாணவி வைசாலிக்கு பூக்கொத்து கொடுத்து வரவேற்ற சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
காச்சலுக்கு அனுமதிக்கப்பட்ட குறித்த சிறுமி மருத்துவமனையில் ஏற்பட்ட தவறினால் இடது கை மணிக்கட்டுடன் மாணவியின் கை அகற்றப்பட்ட நிலையில் அந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.