Homeஇலங்கையாழில் மீண்டும் கொரோனா தொற்று.. மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

யாழில் மீண்டும் கொரோனா தொற்று.. மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Published on

யாழ். பருத்தித்துறை பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் கடந்த சில தினங்களாக காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அப்பெண்ணுக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் போது , எழுமாற்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது அப்பெண்ணுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதனை அடுத்து அப்பெண்ணை விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்று குறைவடைந்தமையை அடுத்து , வைத்தியசாலைகளில் இருந்த தனிமைப்படுத்தல் விடுதிகள் அகற்றப்பட்டுள்ளமையால் , குறித்த பெண்ணை சாதாரண விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை குறித்த பெண் வேறு தொற்றா நோய்களுக்கு உள்ளாகி உள்ளார். அதனால் அவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. அவர் கொரோனா தடுப்பு ஊசிகள் போட்டுக்கொண்ட போதிலும் , உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதனால் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருக்கலாம்.

அதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் போது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லவும் , கொரோனா தொற்று தொடர்பில் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் யாழ்.போதனா வைத்தியசாலை பிரதி பணிப்பாளர் வைத்திய கலாநிதி சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார்.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this