Homeஇலங்கையாழில் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த வயோதிப பெண்

யாழில் பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த வயோதிப பெண்

Published on

யாழில் பொலிஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இன்று (13) இடம் பெற்றுள்ளது.

விசாரணை ஒன்றிற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த குறித்த வயோதிப பெண் திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் 2ம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதையடுத்து வீட்டின் உரிமையாளரான வயோதிப பெண்மணியை பொலிஸார் விசாரணைக்காக அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்து வாக்குமூலத்தினை பெற்றுக் கொள்வதற்காக அப் பெண்மணியை பொலிஸார் அழைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றிருந்த குறித்த வயோதிப பெண்மணி தீடிரென சுகவீனமுற்கு மயங்கி சரிந்துள்ளார்.

இதையடுத்து அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த வயோதிப பெண்மணியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தில் வயோதிப பெண்மணி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Latest articles

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடுகள்

வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள...

ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டு அறிமுகம்

ஜேர்மனியில் 49 யூரோக்கள் பயணச்சீட்டின் அறிமுகம் பொதுப்போக்குவரத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் 49 யூரோ பயணச்சீட்டை அறிமுகப்படுத்தியதைத் தொடர்ந்து,...

அதிகரிக்கப்படவுள்ள ரயில் கட்டணங்கள்

ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை ரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து ரயில்...

உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதை:முதலமைச்சர் அறிவிப்பு

இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்....

More like this