யாழ்.வேலனை மத்திய கல்லூரியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள அறிவித்தல் ஒன்று தற்போது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.
“கல்லூரி வளாகத்தினுள் அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளவும்” என மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் வழங்கியுள்ள அறிவித்தலே இந்த சர்ச்சைக்கு காரணமாக மாறியுள்ளது.
அத்தோடு இந்த விடயம் தற்போது சமூக ஊடகங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மாணவர்கள் பலரும் போசாக்கு குறைப்பாட்டால் பாதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதன் காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.மாணவர்களின் போசாக்கு மற்றும் ஊட்டச்சத்து குறித்து ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலகின் பெரும் நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.
உலக உணவுத்திட்டம் பாடசாலையின் மதிய உணவுக்கு டின் மீன்களை வழங்கி வருவதோடு, மதிய உணவில் முட்டை, நெத்தலி என்பவனவற்றையும் கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இவ்வாறான பின்னணியில் கல்லூரி வளாகத்தினுள் அசைவ உணவுகளை தவிர்த்துக்கொள்ளுமாறு வேலனை மத்திய கல்லூரி அறிவித்துள்ளமை தற்போது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.