யாழ்ப்பாணத்தில் பிறந்து 34 நாட்களேயானா குழந்தை ஒன்று மர்மமான முறையில் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளது.
பொன்னாலை பகுதியைச் சேர்ந்த விதுஜன் கிஷான் எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தையின் மூக்கில் இருந்து இரத்தம் வடிந்ததை அவதானித்த பெற்றோர் குழந்தையை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அதன் போது குழந்தையை பரிசோதித்த வைத்தியர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டது என அறிக்கையிட்டனர்.
குழந்தையின் உயிரிழப்புக்கள் காரணங்கள் தெரிய வராததால், குழந்தையின் சடலத்தில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.