யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பகுதியில் பல்வேறு திருட்டுக்களுடன் தொடர்புடைய திருடனை ஊர்காவற்துறை பொலிஸார் நேற்று (27-02-2023) கைது செய்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மூளாய் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சந்தேகநபர் பல திருட்டுக்களுடன் சம்பந்தப்பட்ட நிலையில் ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு பகுதியில் தலைமறைவாகி இருந்துள்ளார்.
அவருக்கு நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் கைது செய்யப்பட்டவேளை காஸ் சிலிண்டர், உலர் உணவுப் பொருட்கள், தராசு என்பன அவரிடமிருந்து மீட்கப்பட்டன.
குறித்த சந்தேகநபரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.