யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் எருபொருள் நிரப்பு நிலையத்தில் QR இல்லாமல் பெற்றோல் அடிக்க முடியாது என்று தெரிவித்த ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்றிரவு (16) 11:00 நிகழ்வில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இவ்வாறு வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.