யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகரும் நகைக்கடை உரிமையாளரான நடராசா கஜேந்திரன் (வயது 44) தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் அவரது உறவினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனைவி கொழும்பில் வசித்து வரும் நிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து துக்கில் தொங்கி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் உயிரிழந்த அதே நேரம் குறித்த நகைக்கடையில் பணிபுரிந்த 21 வயது யுவதியும் அவரது வீட்டில் உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயிரிழந்த பெண மண்பிட்டி நாவந்துறை பகுதியைச் சேர்ந்த செல்வராசா நிலக்சனா என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருவரது சடலங்களும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.இவர்களது மரணம் தொடர்பில் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.