Homeஇலங்கையாழில் திவிரமடையும் கொரோனாத் தொற்று

யாழில் திவிரமடையும் கொரோனாத் தொற்று

Published on

யாழ். குடாநாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேர் இனம் காணப்பட்ட நிலையில் அவர்களை தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து ஒட்சிசன் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆபத்தான கட்டத்தில் சிகிச்சை பெற்று வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

பருத்தித்துறை ஆதார மருத்துவமனைக்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறச் சென்ற ஒருவருக்குக் கொரோனாத் தொற்றுக்குரிய அறிகுறி காணப்பட்டதையடுத்து அவருக்குச் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக விடுதிகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களுக்கு கொரோனாப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது சிலர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து அனைவரும் தனிமைப்படுத்தல் விடுதியில் வைத்து சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது. கொரோனாவின் திரிபு வைரஸால் இத்தகைய பாதிப்பு உருவாகியிருந்தது.

அதேபோன்று தற்போதும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டு வருகின்றதாகவும் அவர்களில் ஒருவரது உடல் நிலை மோசமாக உள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேவேளை யாழ்.மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில், எழுமாற்று பரிசோதனைகளை செய்யவேண்டாம் என சுற்றறிக்கை வெளியிட்ப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் யாழ் மாவட்டத்தில் அண்மையில் ஒரே நாளில் மூன்று கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த செய்தி ஊடகங்களில் வெளிவந்தது.

கொழும்பிலிருந்து விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம் கொவிட் பரிசோதனைகளை செய்ய வேண்டாம் என்ற அறிவுறுத்தல் சுகாதாரத் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் தினமும் யாழ்.போதனை வைத்தியசாலைக்கு சில அறிகுறிகளுடன் நோயாளர்கள் வருகைதரும் நிலையில் கொவிட் தொற்று அதிகளவில் பரவி இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிகின்றன.

Latest articles

குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்று 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் - சென்னை அணிகள் மோதின. இந்த...

843 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கம்..

இலங்கை மத்திய வங்கியால்  இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட வரம்பை தளர்த்தியதுடன், 843 வகையான பொருட்களுக்கு அந்தப் பொருட்களை இறக்குமதி செய்யும்போது...

வாடகைக்கு வாகனங்களை பெற்று அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது!

வாடகை அடிப்படையில் வாகனங்களைப்  பெற்று அவற்றை அடகு வைத்து  மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில்  இருவரைக்  கைது செய்வதற்கான...

சீனாவில் தயாரிக்கப்பட்ட விமானம் 128 பயணிகளுடன் வெற்றிகரமாக பயணம்

போயிங் மற்றும் ஏர்பஸ் உள்ளிட்ட சர்வதேச விமான சேவைகளுடன் போட்டியிடும் விதமாக சீன அரசு பயணிகள் விமான போக்குவரத்துக்காக...

More like this