Homeஇலங்கையாழில் சுகாதார சீர்கேடான உணவகங்கள் தண்டத்துடன் சீல்!

யாழில் சுகாதார சீர்கேடான உணவகங்கள் தண்டத்துடன் சீல்!

Published on

யாழ்ப்பாணத்தில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு  உணவகங்களுக்கு ஒரு இலட்சத்து 10 ஆயிரம்  தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன், உணவகத்தினை சீரமைக்கும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை காலாவதியான பொருளை விற்பனை செய்த வர்த்தகர் ஒருவருக்கு 60 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நகர் பகுதியில் பொதுசுகாதார பரிசோதகரின் திடீர் பரிசோதனை நடவடிக்கையின் போது சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய இரு உணவகங்கள் இனம் காணப்பட்டதை அடுத்து அதன் உரிமையாளர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணைகளை அடுத்து ஒரு உணவகத்திற்கு 80 ஆயிரம் ரூபாயும், மற்றைய உணவகத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் நீதிமன்றம் தண்டம் விதித்தது. அத்துடன் உணவகத்தின் குறைப்பாடுகளை நிவர்த்தி செய்யும் வரையில் உணவகத்திற்கு சீல் வைக்குமாறும் மன்று கட்டளையிட்டது.

அதேவேளை காலாவதியான பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த பலசரக்கு கடை உரிமையாளருக்கு எதிரான வழக்கு விசாரணையை அடுத்து , அவருக்கு 60 ஆயிரம் ரூபாய் நீதிமன்று தண்டம் விதித்தது.

Latest articles

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில்...

இணையத்தின் ஊடாக பணமோசடியில் ஈடுபட்ட நபர் – பெருந்தொகை சிம் அட்டைகள் மீட்பு

இணையம் ஊடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து பணத்தை தனது வங்கிக்கு வரவு வைத்ததாக கூறப்படும் நபர்...

இன்று முதல் குறைவடையும் பாணின் விலை

பாணின் விலை இரு இறாத்தல் பாணின் (450g) விலை 10 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும்...

இலங்கையர்களுக்கு வெளியான எச்சரிக்கை; அழகு நிலையத்தில் இடம்பெற்ற மோசடி

கொழும்பு, ராஜகிரிய பகுதியில் புற்று நோயாளர்களுக்கு பயன்படுத்தப்படும் ஊசிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்தும் மற்றுமொரு அழகு நிலையம் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. சினிமா நடிகைகள்...

More like this