யாழ். மாவட்டத்தில் இரண்டு மணி நேர இடைவெளியில் 4 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளன.நேற்று முன்தினம் (10.03.2023) இரவு 11 மணி தொடக்கம் நேற்று அதிகாலை 1 மணிக்குமிடையிலே இந்த திருட்டு சம்பவம் பதியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் – நாச்சிமார் கோயிலுக்கு அருகிலுள்ள வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த இருவரே அதனைச் திருடிச் சென்றுள்ளதாக சி.சி.டீ.வி. கமெராவில் பதிவாகியுள்ளது.இந்நிலையில் திருட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளின் இலக்கமும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.இதேவேளை யாழ்.சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் ஆகிய பிரதேசங்களிலும் 3 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.